/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமுதாயக்கூடம் கட்டும் பணி: சிறுமுகையில் தீவிரம்
/
சமுதாயக்கூடம் கட்டும் பணி: சிறுமுகையில் தீவிரம்
ADDED : டிச 17, 2024 11:23 PM

மேட்டுப்பாளையம்; சிறுமுகை பேரூராட்சியில், ஒரு கோடியே, 60 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிறுமுகை பேரூராட்சியில், சமுதாயக்கூடம் கட்ட அரசு, ஒரு கோடியே, 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே, பேரூராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், 2600 சதுர அடியில், புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இதில் தரை தளத்தில் சமையல் கூடமும், உணவு அருந்தும் மண்டபமும் கட்டப்படுகிறது. முதல் மாடியில் மணமகன், மணமகள் அறைகள் தனித்தனியாகவும், வரவேற்பு ஹால் பெரிதாகவும் கட்டப்படுகிறது.
சமுதாய கூடத்திற்கு தேவையான கழிப்பிடங்களும், கட்டப்பட உள்ளன. கட்டி முடித்த பின் திருமணம் மற்றும் அனைத்து விசேஷங்களுக்கும், பொதுமக்கள் உபயோகத்திற்கு, வாடகைக்கு விடப்படவுள்ளது.