/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலையில் சேர்ந்த சில நாட்களில் மாயம்; கட்டுப்பாடுகளை விதிக்க நிறுவனங்கள் எதிர்பார்ப்பு
/
வேலையில் சேர்ந்த சில நாட்களில் மாயம்; கட்டுப்பாடுகளை விதிக்க நிறுவனங்கள் எதிர்பார்ப்பு
வேலையில் சேர்ந்த சில நாட்களில் மாயம்; கட்டுப்பாடுகளை விதிக்க நிறுவனங்கள் எதிர்பார்ப்பு
வேலையில் சேர்ந்த சில நாட்களில் மாயம்; கட்டுப்பாடுகளை விதிக்க நிறுவனங்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 28, 2025 05:52 AM

கோவை; வேலை வாய்ப்பு முகாம்கள் வாயிலாக, தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்வோர் பலர், பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே வெளியேறுவது அதிகரித்துள்ளது.
தனியார் துறையில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், மாதத்தில், மூன்றாவது வெள்ளியன்று, வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான முகாம் நடத்தப்படுகிறது. பின், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
கடந்த 23ம் தேதி, கோவை ரத்தினம் கல்லுாரியில், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கலெக்டர் பவன்குமார் பணி ஆணை வழங்கினார்.
இதற்கு பிறகுதான் பிரச்னையே. சில தனியார் நிறுவனத்தினர், 'நிறுவனத்தில் சேர்ந்த நபர் ஒருவர், ஒரு வாரம் மட்டுமே பணிக்கு வந்தார். மீதமுள்ளவர்கள், அடுத்த வாரம் முதல் வரமாட்டோம் என்று தெரிவித்து விட்டனர். 'வீட்டில் இருந்து துாரமாக இருக்கிறது, வேலை நேரம் அதிகமாக இருக்கிறது' போன்ற பல காரணங்களை, வேலை பெற்றவர்கள் தெரிவிப்பதாக தெரிவிக்கின்றனர்.
சில நாட்கள் கழித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து குறிப்பிட்ட நபர்களை, போனில் தொடர்பு கொள்ளும் போது, பலர் அழைப்பை ஏற்பதில்லை என்கின்றனர்.
இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம்கள் வாயிலாக, பணிக்கு சேர்வோர் அதிகமாக இருந்தாலும், குறிப்பிட்ட நாட்களில் வெளியேறுவோரும் அதிகம். எனவே, பணியில் சேர்ந்த பின், குறிப்பிட்ட மாதங்களுக்காவது நீடிக்க வேண்டும் என்பன போன்ற சில கட்டுப்பாடுகளுடன், இதுபோன்ற முகாம்களை நடத்தலாம் என்றும், தனியார் நிறுவனங்கள் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.