/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களின் புதுமை திறன் வெளிப்படுத்திய போட்டி
/
மாணவர்களின் புதுமை திறன் வெளிப்படுத்திய போட்டி
ADDED : அக் 17, 2025 11:40 PM

கோவை: கோவை அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், அஸ்ட்ரானமி கிளப் சார்பில் மாணவர்களுக்கான அறிவியல் படைப்பு போட்டி நடைபெற்றது.
6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக வானியல் அறிவை மேம்படுத்தும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் தங்கள் கற்பனை மற்றும் அறிவியல் சிந்தனைகளை இணைத்து பல்வேறு வானியல் மற்றும் விண்வெளி சார்ந்த கண்டுபிடிப்பு மாதிரிகளை உருவாக்கினர். மொத்தம் 71 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், சிறந்த 23 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சியில், மாணவர்கள் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் முக்கிய திட்டங்களான 'கங்கன்யான்' மற்றும் 'சந்திரயான்' ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி காட்சிப்படுத்தினர்.
பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் கூறுகையில், “மாணவர்களில் வானியல் பற்றிய ஆர்வத்தை வளர்க்க வும், இத்தகைய போட்டிகள் பெரும் பங்களிப்பு செய்கின்றன.
மாணவர்கள் தங்களின் புதுமை எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக இது அமைந்துள்ளது,” என தெரிவித்தார்.