UPDATED : நவ 25, 2026 09:20 PM
ADDED : நவ 25, 2026 09:20 PM
அ நிறம் | அளவு
கோவை: தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 10 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தேர்தல் எழுத்தறிவு மன்றப் போட்டிகளில் பங்கேற்றனர்.
நிர்மலா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த போட்டிகளில் வாக்காளர் பதிவு, ஓட்டளிக்கும் முறை, வாக்குரிமை உள்ளிட்ட தேர்தல் நடைமுறைகள் குறித்த கட்டுரை, பேச்சு, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
மாநகராட்சி துணை கமிஷனர் குமரேசன், கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் செண்பகலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
