லஞ்சம் கேட்டால் புகார் பண்ணுங்க! வால்பாறை நகராட்சி அறிவிப்பு
லஞ்சம் கேட்டால் புகார் பண்ணுங்க! வால்பாறை நகராட்சி அறிவிப்பு
ADDED : ஆக 31, 2026 06:42 PM
வால்பாறை: வால்பாறை நகராட்சி அலுவலகத்தில், ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், அரசு அலுவலகங்களில் லஞ்சம் வழங்குவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடம் லஞ்சம் பெறும் அதிகாரிகளை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அறிப்பில் கூறியிருப்பதாவது:
லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். ஊழல் குறித்த புகார்களை கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும். உழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், எண்:293, என்.கே.என்.தெரு, ஆலந்துார், சென்னை – 600016. தொலைபேசி எண்: 044–22321090, 22310989, 22342142. மொபைல்போன் எண்: 94981 80936. பேக்ஸ்: 044 – 22321005. மின்அஞ்சல்:dvac@nic.in. தகவல் தெரிவிக்கலாம்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘வால்பாறை நகராட்சியில் லஞ்ச பிரசனையை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் எந்த ஒரு சான்றிதழ் பெறவும் யாருக்கும் லஞ்சம் வழங்க வேண்டியதில்லை. பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் லஞ்சம் பெறுபவர்களை முழுமையாக தடுக்க முடியும்,’ என்றனர்.
