தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சைபர் குற்றம் நடந்து விட்டால் தாமதிக்காமல் புகார் செய்யணும்

சைபர் குற்றம் நடந்து விட்டால் தாமதிக்காமல் புகார் செய்யணும்

சைபர் குற்றம் நடந்து விட்டால் தாமதிக்காமல் புகார் செய்யணும்


UPDATED : நவ 25, 2026 07:00 PM

ADDED : நவ 25, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 07:00 PM ADDED : நவ 25, 2026 07:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இணையவழியில் கணினிகள், மொபைல்போன்கள் பயன்படுத்தி செய்யப்படும் சட்டவிரோத செயல்கள் சைபர் குற்றங்கள் எனப்படுகின்றன.

வங்கி அல்லது முக்கிய நிறுவனங்கள் போல் நடித்து, போலி இணைப்புகள் வாயிலாக ரகசிய தகவல்களை திருடுதல், கணினி தரவுகளை முடக்கிவிட்டு பணம் கேட்பது, இணையவங்கி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஏமாற்றி பணத்தை திருடுதல், அனுமதியின்றி தரவுகளை திருடுவது அல்லது அழிப்பது, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புதல் மற்றும் புகைப்படங்களை தவறாக பயன்படுத்துதல் போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன.

இவற்றில் சிக்காமல் இருக்க பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு கணக்கிற்கும் கடினமான, தனித்துவமான கடவுசொற்களை பயன்படுத்த வேண்டும். வங்கி கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பாக இருமுறை உறுதிப்படுத்தும் வசதியை இயக்க வேண்டும்.

மொபைல் போன் மற்றும் கணினியின் இயங்குதளத்தையும், செயலிகளையும் உடனுக்குடன் புதுப்பிக்க வேண்டும். நம்பகத்தன்மையற்ற மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகளில் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும்.

சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டல் என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் புகார் பதிவு செய்யலாம்.

சைபர் குற்ற உதவி எண் 1930 அல்லது 155260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது சைபர் கிரைம் பிரிவை நேரடியாக அணுகலாம்.

வங்கி கணக்கு மோசடி நடந்தால், முதல் ஒரு மணி நேரத்திற்குள், 1930 என்ற உதவி எண்ணை அழைப்பதும், வங்கி கணக்கை முடக்குவதும் பணத்தை மீட்க மிக முக்கியமான நடவடிக்கைகளாகும். உடனடியாக புகாரளிப்பதால் மோசடியாளரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை முடக்கி திரும்ப பெற முடியும்.

இந்திய ரிசர்வ் வங்கி விதிகளின்படி, மோசடி நடந்த 3 வேலை நாட்களுக்குள் வங்கியில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் இழப்பை குறைக்க முடியும்.

வங்கியில் புகார் அளித்ததற்கான ஒப்புகை ரசீதை மறக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும். அதிக தொகை இழந்திருந்தால், இணையதள புகார் நகல் மற்றும் வங்கி அறிக்கையுடன் அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை நேரில் அணுகி எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும்.

மோசடியாளரின் கணக்கில் பணம் முடக்கப்பட்டால், காவல்துறையின் வழிகாட்டுதலின்படி நீதிமன்ற உத்தரவு அல்லது நேசனல் சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டல் தளத்தின் பண மீட்பு பிரிவு வாயிலாக பணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்கலாம். வங்கியில் புகார் அளித்து 30 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால், ரிசர்வ் வங்கி புகார் பிரிவு வழியாக மேல்முறையீடு செய்யலாம்.

சைபர் கிரைம் நடந்ததும்


செய்ய வேண்டியதென்ன?
* மோசடி நடந்ததை அறிந்தவுடன் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைக்கவும். புகார்தாரர் பெயர், மொபைல் எண், இழந்த தொகை மற்றும் பரிவர்த்தனை எண் ஆகியவற்றை கூறி புகாரை பதிவு செய்ய வேண்டும்.
* வங்கியின் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இணைய வங்கி மற்றும் யுபிஐ சேவைகளை உடனடியாக தற்காலிகமாக முடக்க வேண்டும்.
* பாதுகாப்பான வேறொரு சாதனம் வழியாக இணைய வங்கி கடவுச்சொல், யுபிஐ பின் மற்றும் மின்னஞ்சல் கடவுச்சொற்களை உடனடியாக மாற்ற வேண்டும். வங்கி கிளையில் நேரடியாக புகாரளிக்க வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us