/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலையின் பொறுப்புக்குழு உறுப்பினர் மீது புகார்; மறுக்கிறார் அவர்
/
பாரதியார் பல்கலையின் பொறுப்புக்குழு உறுப்பினர் மீது புகார்; மறுக்கிறார் அவர்
பாரதியார் பல்கலையின் பொறுப்புக்குழு உறுப்பினர் மீது புகார்; மறுக்கிறார் அவர்
பாரதியார் பல்கலையின் பொறுப்புக்குழு உறுப்பினர் மீது புகார்; மறுக்கிறார் அவர்
ADDED : அக் 03, 2024 12:08 AM
கோவை : பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதால், பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என, பாரதியார் பல்கலை ஆசிரியர்கள் சங்கம்(பூட்டா) கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதை துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் மறுத்துள்ளார்.
பாரதியார் பல்கலை ஆசிரியர்கள் சங்க(பூட்டா) செயலாளர், பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு, துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் லவ்லீனா லிட்டில் பிளவர் மீது, புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் கூறியுள்ளதாவது:
பாரதியார் பல்கலை துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினராக லவ்லீனா லிட்டில் பிளவர் இருந்து வருகிறார். தற்காலிக கமிட்டியின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டதிலிருந்து, அவர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆகவே, அவரை துணைவேந்தர் பொறுப்புக்குழுவில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, லவ்லீனா கூறியதாவது:
அவர்கள் என்மீது தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். பதிவாளர் பணிக்கு நான் விண்ணப்பித்துள்ளேன். எனக்கு அப்பதவி கிடைக்கக்கூடாது என்பதற்காக புகார் கூறப்படுகிறது. இதுபோன்று புகார் கூறினால், மானநஷ்ட வழக்கு தொடருவேன். நான் பூட்டா சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக மட்டுமே இருந்தேன். அவர்கள் நடவடிக்கை சரியில்லாததால், வெளியில் வந்து விட்டேன். அவர்கள் கூறும் எந்த புகாரும் உண்மையில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.