/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை ரயில்வே ஸ்டேஷன் புறக்கணிக்கப்படுவதாக புகார்
/
கோவை ரயில்வே ஸ்டேஷன் புறக்கணிக்கப்படுவதாக புகார்
ADDED : மார் 08, 2024 01:21 AM

கோவை;கோவை ரயில்வே ஸ்டேஷனை ரயில்வே துறை புறக்கணிப்பதாக கூறி தி.மு.க., காங்., மா.கம்யூ, இ.கம்யூ., மற்றும் ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கோவை எம்.பி. நடராஜன் தலைமையில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று ரயில்வே அதிகாரிகளிடம் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனு கூறி இருப்பதாவது: வட மாநிலங்களிலிருந்து வரும் ஆறு விரைவு ரயில்கள் கோவை சந்திப்புக்கு வராமல் போத்தனுார் வழியாக இயக்கும் திட்டத்தை கைவிடவேண்டும்.
கோவையிலிருந்து திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, -நாகர்கோவில், -துாத்துக்குடி - ராமேஸ்வரம் ஆகிய நகரங்களுக்கு பொள்ளாச்சி வழியாக தினசரி இரவு நேர ரயில்கள் இயக்கவேண்டும்.
தற்போது பகல் நேர ரயிலாக இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை இரவு நேர ரயிலாக மாற்ற வேண்டும்.
சிங்காநல்லுார், இருகூர் ரயில்வே ஸ்டேஷன்களில் ஏற்கனவே நின்று சென்ற ரயில்கள், மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் மெமு பெட்டி ரயில் சேவை துவக்கப்பட வேண்டும். கோவை -மேட்டுப்பாளையம் இரட்டை வழிப்பாதை அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

