/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலை நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு; தமிழக முதல்வருக்கு புகார்
/
கலை நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு; தமிழக முதல்வருக்கு புகார்
கலை நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு; தமிழக முதல்வருக்கு புகார்
கலை நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு; தமிழக முதல்வருக்கு புகார்
ADDED : நவ 21, 2025 06:10 AM
நெகமம்: கோவை மாவட்ட கூட்டுறவு வார விழாவில், தமிழ்நாடு முதலைமைச்சரின் தாயுமானவர் திட்ட கலை நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், தாயுமானவர் திட்டம் குறித்த கலை நிகழ்ச்சிகளில், நாடக கலைக்குழு புறக்கணிப்பு செய்யப்படுகிறது. இதுகுறித்து, கோவை மாவட்ட நாடக கழகத்தலைவர் மற்றும் தமிழ்நாடு முதியோர் நலம் காக்கும் பேரவையின் நிறுவனர் சண்முகவடிவேல், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில், தற்போது கூட்டுறவு வார விழா துவங்க உள்ள நிலையில், கோவை மாவட்ட நாடக கலை குழுக்களுக்கு, தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டம் பற்றிய கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு அளிக்காமல், கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் புறக்கணித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இதே நிலை தொடர்கிறது.
இதனால், கோவை மாவட்ட நாடக கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு சரியான அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
மேலும், நாடக கலைக்குழுவை புறக்கணிக்கப்படுவதை தடுக்க முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

