/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு மார்கழி மகோத்ஸவ அபிராமி அந்தாதி நிறைவு
/
சிறப்பு மார்கழி மகோத்ஸவ அபிராமி அந்தாதி நிறைவு
ADDED : டிச 31, 2023 11:59 PM

கோவை;கோவையில், ஸ்ருதி சேவா டிரஸ்ட், ஆனைகட்டி, ஆர்ஷ வித்யா குருகுலம் மற்றும் ஸ்ரீ லலிதாம்பிகை டிரஸ்ட் சார்பில், சிறப்பு மார்கழி மகோத்ஸவ அபிராமி அந்தாதி இசை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இந்த மூன்று நாள் நிகழ்ச்சி, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மணி மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 28ம் தேதி துவங்கியது.
ஆர்ஷ வித்யா குருகுலத்தின் தலைமை ஆச்சாரியர் சுவாமி சதாத்மானந்த சரஸ்வதி ஆசியுடன், நாள்தோறும் மாலை, 6:00 முதல் இரவு 8:00மணி வரை நிகழ்ச்சி நடந்தது. நாள்தோறும் விளக்கு பூஜை, குரு வந்தனம், கணபதி துதியை தொடர்ந்து, சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி, அபிராமி அந்தாதியின் சில முக்கியமான பாடல்களை இசையுடன் பாடி விளக்கினார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று முன் தினம், 108 விளக்கு பூஜையை, சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஆனைமலை, ஆர்ஷ வித்யா பீடம், சுவாமி ததேவானந்த சரஸ்வதி முன்னிலை வகித்து, ஆசியுரை ஆற்றினார்.
ஆனைகட்டி, ஆர்ஷ வித்யா குருகுலம் சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி, அபிராமி அந்தாதி பாடல்கள் பாடி விளக்கவுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.