/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
குமரகுரு கல்லுாரியில் கணினி தமிழ் கருத்தரங்கு
/
குமரகுரு கல்லுாரியில் கணினி தமிழ் கருத்தரங்கு
PUBLISHED ON : அக் 14, 2025 12:00 AM
கோவை:தமிழ் வளர்ச்சித்துறை, குமரகுரு கல்வி நிறுவனங்கள், தமிழ் இணைய கல்வி ஆகியவை இணைந்து, கோவை குமரகுரு கல்லுாரியில் 'கம்ப்யூட்டர் தமிழ் உலகளாவிய நோக்கும், போக்கும்' என்ற தலைப்பில், கருத்தரங்கை நடத்தியது.
சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்லுாரி அரங்கில், கருத்தரங்கு நேற்று நடந்தது. துவக்க விழாவில், கல்லுாரி தாளாளர் சங்கர் வாணவராயர் முன்னிலை வகித்தார். தமிழ் இணைய கல்வி கழகத்தின் இயக்குனர் மோகன் வரவேற்றார்.
மரபின் மைந்தன் முத்தையா, திருக்குறள்களில் உலக வாழ்க்கை முறை பற்றி விளக்கினார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள் வாழ்த்துரை வழங்கினார். கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கணினி தமிழ் பன்னாட்டு கருத்தரங்கு மலரை வெளியிட்டார்.
கணினி தமிழ் பேரவை தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ் இணைய கல்வி கழகம், குமரகுரு கல்வி நிறுவனங்கள் இடையே, மின் பதிப்பாக்கம் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி இயக்குனர் ரகுபதி, பெரியார் பல்கலை இதழியல் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர் தமிழ் பரிதி மாரி உட்பட பலர் பங்கேற்றனர்.