ADDED : ஆக 17, 2026 04:14 PM
வால்பாறை: அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளதால் ஆசிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
வால்பாறையில் 2026–27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் துவங்கியது. தொழில் பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீயன், பிட்டர், பேஷன்டெக்னாலஜி, டெக்ஸ்டைல் மெக்கட்ரானிக்ஸ் உள்ளிட்ட நான்கு பாடப்பிரிவுகளின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் தொழிற்பயிற்சி நிலையத்தில் மொத்தம் உள்ள, 112 இடங்களுக்கு தற்போது வரை, 35 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளதால் வரும் காலங்களில் தொழில்பயிற்சி நிலையம் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொழில்பயிற்சி நிலைய ஆசிரியர்கள் கூறியதாவது:
வால்பாறையில் கடந்த, 2023ம் ஆண்டு முதல் அரசு தொழில் பயிற்சி நிலையம் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் மாணவர்கள் சேர்க்கை அதிகம் காணப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு, 72 மாணவர்கள் சேர்ந்து படித்தனர். இந்த ஆண்டு இது வரை, 35 மாணவர்கள் மட்டுமே பயிற்சியில் சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு எஸ்டேட் பகுதிக்கும் நேரடியாக சென்று பள்ளி செல்லாமல் பாதியில் நின்ற மாணவர்களை அழைத்து வந்து பயிற்சி வழங்குறோம். இருப்பினும் மாணவர் சேர்க்கை குறைந்த கொண்டே வருவது கவலையாக உள்ளது. பல்வேறு காரணங்களால் தொழிலாளர்கள் வால்பாறையை விட்டு வெளியேறி வருவதால் மாணவர் சேர்க்கையும் சரிந்துள்ளது.
இவ்வாறு, கூறினார்.
