/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கான்கிரீட் ரோடு சீரமைப்பு; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி 'தினமலர்' செய்தி எதிரொலி

ADDED : மே 20, 2025 11:41 PM

வால்பாறை; வால்பாறையில் இருந்து சோலையாறு செல்லும் ரோட்டில், விடுபட்டிருந்த பகுதி, 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.
வால்பாறையில் இருந்து சோலையாறு எஸ்டேட் செல்லும் வழித்தடத்தில், நல்லகாத்து எஸ்டேட் ரோடு அமைந்துள்ளது. மொத்தம் மூன்று கி.மீ., துாரம் உள்ள ரோடு, குண்டும் குழியுமாக இருந்ததால், பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி சார்பில் கடந்த ஆண்டு கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டது.
ஆனால், நல்லகாத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செல்லும் ரோட்டின் எதிரில், 100 மீட்டருக்கு ரோடு போடப்படவில்லை. சோலையாறு செல்லும் ரோட்டின் இடையே குறிப்பிட்ட தொலைவுக்கு ரோடு அமைக்காததால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அரசு பஸ்களில் 'லீப்' கட்டாகி விடுகிறது.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், விபத்துக்குள்ளாகின்றனர். நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் வால்பாறை வரும் சுற்றுலா வாகனங்கள், உள்ளூர் வாகனங்கள் அவதிக்குள்ளாகி வருகின்றன.
இது குறித்து, கடந்த மாதம், 25ம் தேதி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, நகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில், பள்ளமாக இருந்த கான்கிரீட் ரோடு சீரமைக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டுநர்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.