/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சி செயலருக்கு நிபந்தனை ஜாமின்
/
ஊராட்சி செயலருக்கு நிபந்தனை ஜாமின்
ADDED : செப் 30, 2025 11:17 PM

அன்னுார்; கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், கோட்டைபாளையத்தைச் சேர்ந்தவர் விக்ரம் ராஜ். இவர், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனையை வரன்முறைபடுத்த, கொண்டையம் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
உத்தரவு வழங்க, ஊராட்சி செயலர் முத்துச்சாமி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் விக்ரம் ராஜ் புகார் செய்தார்.
அவர்களது அறிவுரைப்படி, செப். 11ல் ரசாயனம் கலந்த, 10 ஆயிரம் ரூபாயை, முத்துச்சாமியிடம் விக்ரம் ராஜ் கொடுத்தார்.
அதை வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஊராட்சி செயலர் பதவியில் இருந்து, அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
ஜாமின் கோரி, முத்துச்சாமி தாக்கல் செய்த மனு, கோவை கோர்ட்டில் தள்ளுபடி ஆனது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஜாமின் தரப்பட்டது.
ஜாமினில் வெளியே வந்த முத்துச்சாமி, கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் நேற்று கையெழுத் திட்டார்.