/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ., மறைவுக்கு இரங்கல் கூட்டம்
/
அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ., மறைவுக்கு இரங்கல் கூட்டம்
அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ., மறைவுக்கு இரங்கல் கூட்டம்
அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ., மறைவுக்கு இரங்கல் கூட்டம்
ADDED : ஜூன் 22, 2025 11:21 PM

அன்னுார்:அனைத்துக் கட்சி சார்பில், வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி மறைவுக்கு, அன்னுாரில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் கோவையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
அவரது உடல் அன்னுார் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க.,வினர் அமுல்கந்தசாமியின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அன்னுார் மின் மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றன.
இதையடுத்து அனைத்து கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட செயலாளர் அருண்குமார், எம்.எல்.ஏ., க்கள், தி.மு.க., சார்பில், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், பா.ஜ., சார்பில் ஒன்றிய தலைவர்கள் கணேசமூர்த்தி, ஆனந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.