/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரியில் மாநாடு
/
தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரியில் மாநாடு
ADDED : பிப் 15, 2026 06:13 AM

கோவை: நவக்கரை, தனலட்சுமி சீனிவாசன்பொறியியல் கல்லுாரியில், 'எச்.ஆர்., மாநாடு 3.0' நடந்தது. கல்லுாரியின் செயலர் நீலராஜ் தலைமை வகித்தார்.
மாநாட்டில் நடந்த அமர்வுகளில், தற்போதைய ஆட்கள் தேர்வு முறைகள், திறன் எதிர்பார்ப்புகள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் தொழில்துறை தயார் நிலை ஆகியவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கேள்வி பதில் அமர்வின் மூலம் மாணவர்கள் நிபுணர்களுடன் நேரடியாக கலந்துரையாடி தொழில் வாய்ப்புகள் குறித்து தெளிவு பெற்றனர்.
நாஸ்காம் நிறுவனத்தின் இயக்குனர் உதயசங்கர், கல்லுாரியின்இயக்குனர் வினோத், முதல்வர் ஜெகதீசன், அகாடமிக் டீன் பாகீரதி, கல்லுாரி முதல்வர் ஜெகதீசன் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

