/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தாபா'க்களில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
/
'தாபா'க்களில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
ADDED : நவ 09, 2024 11:37 PM

கோவை: கோவை மாவட்ட போலீஸ் சார்பில் தாபாக்களில் போலீசார் நடத்திய சோதனையில் நுாற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி மற்றும் நெடுஞ்சாலைகளில் பல 'தாபா'க்கள், குடில்களில் ஓட்டல்கள் நடத்தப்படுகின்றன. அதில் பல இடங்களில் சட்டவிரோதமாக மது அருந்த அனுமதிக்கின்றனர். மது விற்பனையும் செய்கின்றனர்.
இதை கட்டுப்படுத்தும் வகையில், எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவில், 240 காவலர்கள் அடங்கிய, 60 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நேற்று மாலை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு குழுவினரும் தலா இரண்டு 'தாபா'வில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சில இடங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சில 'தாபா'க்களில் அனுமதி இன்றி மது அருந்த அனுமதித்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை வாங்கி, அதிலிருந்த மதுபானத்தை போலீசார் கீழே ஊற்றினர்.