தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க காங்., தீர்மானம்

 பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க காங்., தீர்மானம்

 பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க காங்., தீர்மானம்


ADDED : ஆக 29, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 04:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: கோவை தெற்கு மாவட்ட காங்., சார்பில், அமைப்பு மறு சீரமைப்பு - 2 ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி தனியார் ேஹாட்டலில் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். அதில், தெற்கு மாவட்ட பார்வையாளர் முருகேசன், கட்சியை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கினார்.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் பகவதி, பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பூத் கமிட்டி மற்றும் மண்டல கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பொள்ளாச்சியை புதிய மாவட்டமாக அறிவிக்க முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. விவசாய மின் இணைப்புக்கு தக்கல் முறையில் பணம் செலுத்தியவர்களுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகளிருக்கு இலவச பஸ் பயணம் அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தெற்கு மாவட்ட பார்வையாளர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைத்ததால் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். வரும், 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில், பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us