/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங். கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
/
காங். கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
ADDED : நவ 21, 2025 06:11 AM
பொள்ளாச்சி: கோவை தெற்கு மாவட்ட காங். கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், பொள்ளாச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.
தமிழக காங். கட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து, பூத் கமிட்டி பணிகள் குறித்து விளக்கினார். மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, பூத் வாரியாக படிவங்கள் பெற்ற பொதுமக்களுக்கு, காங்., கட்சி சார்பில் அதனை சரியான முறையில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க, தொகுதி வாரியாக கமிட்டி அமைத்து கண்காணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தொகுதிகளில், பூத் கமிட்டி அமைத்து களப்பணியாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.
வரும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை, கட்சி மேலிடம் கூட்டணியில் பேசி காங். கட்சிக்கு ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

