/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கீகாரம் இல்லாத மனைகளை வரைமுறைப்படுத்த சிறப்பு முகாம் மாவட்ட நிர்வாகத்துக்கு காங்கிரஸ் கோரிக்கை
/
அங்கீகாரம் இல்லாத மனைகளை வரைமுறைப்படுத்த சிறப்பு முகாம் மாவட்ட நிர்வாகத்துக்கு காங்கிரஸ் கோரிக்கை
அங்கீகாரம் இல்லாத மனைகளை வரைமுறைப்படுத்த சிறப்பு முகாம் மாவட்ட நிர்வாகத்துக்கு காங்கிரஸ் கோரிக்கை
அங்கீகாரம் இல்லாத மனைகளை வரைமுறைப்படுத்த சிறப்பு முகாம் மாவட்ட நிர்வாகத்துக்கு காங்கிரஸ் கோரிக்கை
ADDED : ஜன 14, 2026 05:21 AM
பெ.நா.பாளையம்: -: மலையிட பாதுகாப்பு க்கு குழுமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத மனைகளை வரைமுறைப்படுத்த, சிறப்பு முகாம் நடத்த, காங்., கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, கோவை மாநகர், மாவட்ட காங்., கமிட்டியின், மாவட்ட துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி உள்ள மனு:
மாவட்டத்தில் மலையிட பாதுகாப்பு குழுமம் திட்டத்தில் வரக்கூடிய பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம், வீரபாண்டி, நாயக்கன்பாளையம் கிராமங்களில் உள்ள அங்கீகாரம் இல்லாத லே-அவுட் களில் இடம் வாங்கிய பொதுமக்கள், தங்களுடைய மனைகளுக்கு அரசு அறிவித்துள்ள மனை வரை முறைப்படுத்தும் திட்டத்தில் எளிதில் அப்ரூவல் பெற முடிவதில்லை.
இத்திட்டத்தின் கீழ் வரக்கூடிய கிராமங்களில் மனைகளை வரைமுறைப்படுத்த, வனத்துறை, வருவாய்த்துறை, விவசாயத்துறை, கனிமவளத்துறை ஆகிய துறைகளில், தடையின்மை சான்று பெற்று, சமர்ப்பிக்க வேண்டியதுள்ளது.
சிறு மனை உரிமையாளர்கள், வனத்துறை, வருவாய்த்துறை, விவசாயத்துறை, கனிமவளத்துறை ஆகிய துறைகளில் தடையின்மை சான்று பெற, அதிக செலவும், நீண்ட கால தாமதமும் ஏற்படுகிறது.
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இரண்டு சென்ட், மூன்று சென்ட் இடங்களை குறைந்த விலையில் வாங்கி உள்ளனர். 2018ம் ஆண்டு அங்கீகாரம் இல்லாத மனைகளை வரைமுறைப்படுத்த ஒரு திட்டத்தை அரசு அறிவித்தது. பொதுமக்களும் அந்த திட்டத்தின் கீழ் 500 ரூபாய் செலுத்தி பதிவு செய்து, இன்றுவரை தங்களுடைய மனைகளை வரைமுறைப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். பலர் வீடுகளை கட்டி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வரிவிதிப்பும் செய்து வைத்துள்ளனர்.
ஆனால், தங்களுடைய பண தேவைக்காக வங்கிகளில் கடன் பெற சென்றால், டி.டி.சி.பி., அப்ரூவல் பெற்ற மனைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என, திருப்பி அனுப்புகின்றனர்.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில், சிறப்பு முகாம் நடத்தி, முகாமிலேயே தடையின்மை சான்று வழங்கி, மனைகளை வரைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

