/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இணைப்பு பகுதிகளில் யு.ஜி.டி., பணி துவக்கம்: திட்டத்தில் 16 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு
/
இணைப்பு பகுதிகளில் யு.ஜி.டி., பணி துவக்கம்: திட்டத்தில் 16 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு
இணைப்பு பகுதிகளில் யு.ஜி.டி., பணி துவக்கம்: திட்டத்தில் 16 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு
இணைப்பு பகுதிகளில் யு.ஜி.டி., பணி துவக்கம்: திட்டத்தில் 16 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு
ADDED : மார் 15, 2024 11:56 PM
கோவை:மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு பகுதிகளில், 16 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் விதமாக, ரூ.318.90 கோடியில் யு.ஜி.டி., திட்டம்துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியுடன் குறிச்சி, குனியமுத்துார், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று நகராட்சிகள், சின்னவேடம்பட்டி, காளப்பட்டி, சரவணம்பட்டி, வெள்ளகிணறு, துடியலுார், வடவள்ளி, வீரகேரளம் ஆகிய ஏழு பேரூராட்சிகள் மற்றும் விளாங்குறிச்சி ஊராட்சியானது கடந்த, 2011ம் ஆண்டு இணைக்கப்பட்டது.
இணைக்கப்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டத்தை(யு.ஜி.டி.,) செயல்படுத்தும் விதமாக எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.
இதில், 2, 3, 4, 10, 11, 12, 13, 14, 21 ஆகிய, 9 வார்டுகளைஉள்ளடக்கிய சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு பகுதிகள் மண்டலம்-6 என குறிப்பிடப்பட்டது. இப்பகுதிகளில், 2055ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு தினமும், 75 லட்சம் லிட்டர் முதல்உச்சகாலத்தில், 1.3 கோடி லிட்டர் கழிவுநீர் தினமும் வெளியேற்றப்படும் எனகணக்கிடப்பட்டது.
இதற்கென, மூன்று கழிவுநீர் உந்து மற்றும் ஆறு கழிவுநீர் ஏற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து, 97.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து அருகே உள்ள ஓடையில் வெளியேற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீட்டுக்கு, நிர்வாக ஒப்புதல் கிடைத்ததையடுத்து நேற்று முன்தினம், ரூ.318.90 கோடி மதிப்பீட்டில், யு.ஜி.டி., பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

