/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க.,வில் தொகுதி வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்
/
தி.மு.க.,வில் தொகுதி வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்
தி.மு.க.,வில் தொகுதி வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்
தி.மு.க.,வில் தொகுதி வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்
ADDED : மார் 03, 2024 10:31 PM
ஆனைமலை;ஆனைமலையில், தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
வால்பாறை சட்டசபை தொகுதிக்கான, தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், நா.மூ. சுங்கத்தில் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ் தலைமை வகித்தார். வால்பாறை நகர செயலாளர் சுதாகர் வரவேற்றார்.
பேரூராட்சி செயலாளர்கள் பால்ராஜ், பார்த்திபன், பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்ககுமார் முன்னிலை வகித்தனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி பேசினார். கூட்டத்தில், வரும் லோக்சபா தேர்தலில் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள், முகவர்கள் பணிகள் மற்றும் களப்பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் மாணிக்கவேல் நன்றி கூறினார்.