/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.54.96 கோடி மதிப்பில் புது கோர்ட் கட்டுமானம்
/
ரூ.54.96 கோடி மதிப்பில் புது கோர்ட் கட்டுமானம்
ADDED : செப் 17, 2025 10:21 PM
கோவை; கோவை அரசு கலைக்கல்லுாரி ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 47க்கும் மேற்பட்ட கோர்ட்கள் செயல்படுகின்றன. இவ்வளாகத்தில், போதிய இட வசதியின்றி நெருக்கடி ஏற்பட்டது. சிறப்பு நீதிமன்றங்களை வேறிடங்களுக்கு மாற்றினால், பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில், 14 நீதிமன்றங்கள் செயல்படும் வகையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு, 54.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்தாண்டு நவ.,5ல் அரசாணை வெளியிடப்பட்டது.
மார்ச்சில் பூமி பூஜை போடப்பட்டு, கட்டுமான பணி துவங்கியது. நான்கு தளங்கள் கொண்ட இந்த கட்டடத்தில், பணி துவங்கி ஏழு மாதத்தில், முதல் தளம் கான்கிரீட் போடப்பட்டுள்ளது. அடுத்தாண்டுக்குள் கட்டுமான பணி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.