UPDATED : ஜூன் 14, 2026 10:06 PM
ADDED : ஜூன் 14, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
சூலுார்:சூலுார் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கட்டட தொழிலாளி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக் குட்பட்ட கிராமத்தை சேர்ந்த, 11 வயது சிறுவனை, கிரிக்கெட் பந்து வாங்கி தருவதாக கூறி, அழைத்து சென்ற திருப்பூர், முதலிபாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளியான காதர் மொய்தீன்,31 பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் கூறியுள்ளான். சூலுார் அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், காதர் மொய்தீனை கைது செய்தனர்.
