ADDED : செப் 01, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: வடபுதுரை சேர்ந்த கட்டட தொழிலாளி குடும்ப பிரச்னை காரணமாக, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிணத்துக்கடவு, வடபுதூர் கோல்டன் பார்க் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார், 38, கட்டட தொழிலாளி. மனைவி ராஜேஸ்வரி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். சரவணகுமாருக்கு குடி பழக்கம் இருந்ததால் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், கடந்த, 5 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து, அப்பா அழகிரிசாமியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், மன வேதனையில் இருந்த சரவணகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
