ADDED : செப் 29, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
கோவை: ஓய்வூதியத்தை அதிகரிக்க வலியுறுத்தி, கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், கட்டுமானப் பொருட்களான மனை, ஜல்லி, கம்பி, சிமென்ட் உள்ளிட்டவற்றின் விலையை கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
