/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிழக்கு புறவழிச் சாலைக்கு ஆலோசகர்கள் நியமனம்
/
கிழக்கு புறவழிச் சாலைக்கு ஆலோசகர்கள் நியமனம்
ADDED : நவ 17, 2025 12:20 AM
அன்னுார்: கோவை வடக்கு புறநகரில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கிழக்கு புறவழிச் சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பல்லடம் - திருச்சி ரோட்டில் உள்ள செம்மி பாளையத்தில் துவங்கி, கருமத்தம்பட்டி அருகே அவிநாசி ரோடு, கிட்டாம் பாளையம், கணேசபுரம் ஆகிய ஊர்கள் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள மத்தம்பாளையத்தில் இணையும்படி 81 கி.மீ., தூர கிழக்கு புறவ ழிச் சாலை அமைக்க மார்க்கிங் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கிழக்கு புறவழிச் சாலை எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிட்டாம்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், புறவழிச்சாலை திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேள்வி கேட்டிருந்தார். இதற்கு தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் கோட்ட பொறியாளர் (திட்டம்) சதானந்தம் அளித்துள்ள பதிலில், 'விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோவை கிழக்கு புறவழிச் சாலைக்கு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளதால் தாங்கள் கோரும் தகவல் ஏதும் இல்லை,' என தெரிவித்துள்ளார். கோட்ட பொறியாளரின் பதிலால் கிழக்கு புறவழிச்சாலை அமைக்க ஆலோசர்கள் நியமிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

