sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

12 கி.மீ., தூரத்திற்குள் மாசுபடும் குடிநீர் புரியாத புதிர்!சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு ...

/

12 கி.மீ., தூரத்திற்குள் மாசுபடும் குடிநீர் புரியாத புதிர்!சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு ...

12 கி.மீ., தூரத்திற்குள் மாசுபடும் குடிநீர் புரியாத புதிர்!சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு ...

12 கி.மீ., தூரத்திற்குள் மாசுபடும் குடிநீர் புரியாத புதிர்!சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு ...


ADDED : மார் 04, 2024 11:57 PM

Google News

ADDED : மார் 04, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்:'அன்னுார் பேரூராட்சியில் வழங்கப்படும் குடிநீரால், சளி, காய்ச்சல் ஏற்படுகிறது. பில்லுார் மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள குடிநீரின் துாய்மை தன்மை, பாறைத் துறையில் எடுக்கும் போது மாசடைந்து இருப்பதற்கு என்ன காரணம்' என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

அன்னுாரில், 15 வார்டுகளில், 28 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, அன்னுார், மோப்பிரிபாளையம், அவிநாசி ஆகிய மூன்று பேரூராட்சிகள், சூலுார் விமானப்படை குடியிருப்பு, 55 கிராம ஊராட்சிகள் ஆகியவற்றிற்கு குடிநீர் வழங்கும் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 241 கோடி ரூபாயில் துவக்கப்பட்டது. 2021ல் நிறைவடைந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ், அன்னுார் பேரூராட்சிக்கு தினமும் 21 லட்சம் லிட்டர் நீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக குடிநீர் மிகவும் சுவையற்று போர்வெல் நீர் போல் உள்ளது.

கூட்டு குடிநீர் திட்ட குடிநீரை குடிப்போர், சளி, காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட உடல்நல பாதிப்புக்கு உள்ளாவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

நேற்று முன் தினம் அன்னுாரில் இருந்து பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள் அடங்கிய குழுவினர் சுமைதாங்கியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்று இளநிலை பொறியாளர் சசிகுமார், நீர் பகுப்பு ஆய்வாளர் சுபேர் மற்றும் அலுவலர்களை சந்தித்து குடிநீர் சுவை மற்றும் நோய் பாதிப்பு குறித்து தெரிவித்தனர்.

அதிகாரிகள் பதிலளிக்கையில், ''இங்கு 13 லட்சத்து 45 ஆயிரம் உள்ள லிட்டர் கொள்ளளவு கொண்ட நில மட்ட தொட்டி உள்ளது. தினமும் 17 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரித்து அனுப்பி வருகிறோம். இங்கே டிடிஎஸ் மற்றும் சோடியம் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டிடிஎஸ், சோடியம், பி.எச். வேல்யூ ஆகியவை அரசு நிர்ணயித்த அளவுக்குள் தான் உள்ளது.

எனினும், மேட்டுப்பாளையம் பகுதியில் பரிசோதித்த குடிநீரில் உள்ள துாய்மை தன்மை, இங்கு பாறை துறையில் எடுக்கும் போது குறைந்து விடுகிறது. டிடிஎஸ் அளவு மேட்டுப்பாளையத்தில் இருப்பதை விட இங்கே இரண்டு மடங்கு அதிகரித்து விடுகிறது,'' என்றனர்.

கவுன்சிலர்கள் கூறுகையில், ''குடிநீரை பரிசோதித்த போது, பில்லுாரில் டிடிஎஸ் 85 ஆக உள்ளது. மேட்டுப்பாளையத்தில் 115 ஆக உள்ளது. ஆனால் நம் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கும் பாறை துறையில் 215 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் சோடியம் அளவு பில்லுார் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருப்பதைவிட இங்கு கூடுதலாக இருக்கிறது.

பில்லுார் மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள குடிநீரின் துாய்மை தன்மை, பாறைத் துறையில் எடுக்கும் போது மாசடைந்து இருப்பதற்கு என்ன காரணம். வரும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் கழிவுநீர் கலக்கிறதா, தொழிற்சாலை கழிவு கலக்கிறதா என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றனர்.

மேலும், பரிசோதிப்பதற்காக சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீர் மாதிரியை கவுன்சிலர்கள் சேகரித்து கோவையில் உள்ள குடிநீர் பரிசோதனை நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us