/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தொடர்ந்து புத்தகம் படியுங்க படித்ததை செயல்படுத்துங்க'
/
'தொடர்ந்து புத்தகம் படியுங்க படித்ததை செயல்படுத்துங்க'
'தொடர்ந்து புத்தகம் படியுங்க படித்ததை செயல்படுத்துங்க'
'தொடர்ந்து புத்தகம் படியுங்க படித்ததை செயல்படுத்துங்க'
ADDED : ஜன 25, 2025 12:31 AM

பட்டம் வினாடி - வினா நிகழ்ச்சியில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
எந்தத் துறையாக இருந்தாலும் ஆர்வமும், வாசிப்பும்தான் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும். படிக்காதவர்களாக இருந்தாலும் கூட, ஆர்வம் மிக முக்கியம். வாசிக்கும் பழக்கத்தை, 'தினமலர்' நாளிதழ் ஊக்குவிப்பது பாராட்டுக்குரியது. வாசிப்பதற்கு முடிவே கிடையாது. வாழும் வரை வாசிக்கலாம்.
பொது உலகத்தை அறிந்து கொள்ள வாசிப்பு முக்கியம். 'பட்டம்' மாணவர் பதிப்பு போன்றவை, மாணவர்களை வாசிப்புப் பழக்கத்துக்குள் கொண்டு வர முயற்சிப்பது வரவேற்கத்தக்கது.
பாடப்புத்தகத்தை மட்டும் படிப்பது, அல்லது தேர்வுக்கு பயன்படுவதை மட்டும்தான் படிப்பது என்பது கூடாது. உலகத்தில் நடப்பதைத் தெரிந்து கொள்ள, பல்வேறு துறைகள் சார்ந்தும் படிக்க வேண்டும். மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். புதிய சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். படித்தவற்றை செயல்முறைப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இதற்கு நாம் பள்ளி வயதில் இருந்தே, புதியனவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இதனால், சில துறைகள், பணிகள் இல்லாமலேயே போய்விடலாம். எனவே, எதற்கும் தயாராக இருங்கள். எப்போதும் 'அப்டேட்' ஆக இருங்கள்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

