தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தொடர் கனமழை எதிரொலி இளநீர் விலை ரூ.2 சரிவு

தொடர் கனமழை எதிரொலி இளநீர் விலை ரூ.2 சரிவு

தொடர் கனமழை எதிரொலி இளநீர் விலை ரூ.2 சரிவு


UPDATED : அக் 26, 2026 05:35 PM

ADDED : அக் 26, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 05:35 PM ADDED : அக் 26, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனைமலை: பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில், இளநீர் பண்ணை விலை, கடந்த வாரத்தை விட இரண்டு ரூபாய் சரிந்துள்ளது.

பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு இருந்து, தேங்காய், இளநீர் உள்ளிட்டவை மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

தரமான குட்டை, நெட்டை, வீரிய ஒட்டு ரக இளநீர் விலை, கடந்த வார விலையில் இருந்து இரண்டு ரூபாய் குறைந்து, 50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீர் விலை, 19,750 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்வதால், இளநீர் விலை குறைந்துள்ளது. மேலும், ஈரியோபைட் சிலந்தி பூச்சியின் தாக்குதல் அதிகரிப்பால் இளநீர் தரமும் குறைந்து காணப்படுகிறது.

சிலந்தி பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த, தேவையான பூச்சி கட்டுப்பாடு முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என, ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us