/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர் மழை; தயார் நிலையில் அரசு மருத்துவமனை
/
தொடர் மழை; தயார் நிலையில் அரசு மருத்துவமனை
ADDED : மே 31, 2025 04:29 AM
கோவை; தொடர் மழை காரணமாக நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதால், கோவை அரசு மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை இருந்து வருகிறது. பல்வேறு பகுதிகளிலும், மழைநீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள நீரில், கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், கோவை அரசு மருத்துவமனையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''பேரிடர் மேலாண்மையை கையாள அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மின்சார பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் வார்டுகளுக்குள் வராமல் இருக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சலுக்கான வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அனைத்து வார்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோர் அனைத்து பேரிடர்களையும் சந்திக்க, தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருந்து துறை, ஆய்வகங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.