/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோத்தகிரியில் தொடர் மழை; பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு
/
கோத்தகிரியில் தொடர் மழை; பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு
கோத்தகிரியில் தொடர் மழை; பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு
கோத்தகிரியில் தொடர் மழை; பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு
ADDED : அக் 05, 2024 06:39 AM

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் கட்டபெட்டு சுற்றுவட்டார பகுதிகளில், கன மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில், 25 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு அனுகூலமாக உள்ளது. குறிப்பாக, தேயிலை தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்து வருவதால், பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது.
உரம் இடாத தேயிலை தோட்டங்களுக்கு, தற்போது ஆர்வத்துடன் உரம் இடும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மூன்று மாதத்திற்கு முன்பு வரை பசுந்தேயிலை கிலோவுக்கு, 16 முதல் 22 ரூபாய் வரை விலை கிடைத்து வந்தது. மகசூல் அதிகரிப்பால் தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 28 முதல், 30 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.