தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையம் நகராட்சியில், 140 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு, தனியார் நிறுவனத்தினர் சம்பளம் கொடுத்து வருகின்றனர். பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த, 2024ம் ஆண்டு, ஈ.பி.எப்., தொகையை இன்னும் பணியாளர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை. பலமுறை போராட்டம் நடத்தியும் பயன் இல்லாததால், துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற் சங்கத்துடன் இணைந்து, மேட்டுப்பாளையம் நகராட்சியில், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையம் தொழிற்சங்க தலைவர் தொல்குடிமைந்தன் தலைமையில், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஆனந்தகுமார், துணை செயலாளர்கள் நாகராஜ், விக்னேஷ் உட்பட 140 பணியாளர்கள், நகராட்சி அலுவலக வளாகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடத்தினர்.

துாய்மை பணிகள் தனியார் மயத்தை கைவிட வேண்டும். தினக்கூலி, தொகுப்பூதியம் ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும். அனைத்து பிரிவு பணியாளர்களுக்கும், 8.33 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us