/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சப்-கோர்ட் விசாரணையில் அதிக வழக்கில் தண்டனை
/
சப்-கோர்ட் விசாரணையில் அதிக வழக்கில் தண்டனை
ADDED : மார் 22, 2025 05:01 AM

கோவை ; கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், செயல்பட்டு வரும் முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் நான்கு கூடுதல் சார்பு நீதிமன்றங்களில், கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
மாநகர போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், பதிவாகும் கிரிமினல் குற்றங்களில், ஏழு ஆண்டுக்கு கீழ் தண்டனை அளிக்கக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ், தாக்கல் செய்யப்படும். கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் மீது, விசாரணை நடத்தப்படுகின்றன.
ஐந்து சார்பு நீதிமன்றங்களில், கடந்தாண்டில் அதிக வழக்குகள் விசாரணை முடிக்கப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2024ல், 75 வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டு, 32 வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டோருக்கு, இரண்டு ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டில், மார்ச் வரை 10 வழக்குகளில், தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஐந்து நீதிமன்றங்களில், அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, ஆஜராகி வருகிறார். அதிக வழக்குகளில் வாதாடி, சிறை தண்டனை பெற்று கொடுத்ததால், கிருஷ்ணமூர்த்திக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் பாராட்டு தெரிவித்து, சான்றிதழ் வழங்கினார்.