/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுறவு வார விழா கொண்டாட்டம்: ரூ. 54 கோடியில் நலத்திட்ட உதவி
/
கூட்டுறவு வார விழா கொண்டாட்டம்: ரூ. 54 கோடியில் நலத்திட்ட உதவி
கூட்டுறவு வார விழா கொண்டாட்டம்: ரூ. 54 கோடியில் நலத்திட்ட உதவி
கூட்டுறவு வார விழா கொண்டாட்டம்: ரூ. 54 கோடியில் நலத்திட்ட உதவி
ADDED : நவ 21, 2025 07:02 AM
கோவை: அனைத்திந்திய, 72 வது கூட்டுறவு வார விழா கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடந்தது. விழாவில் 2,808 பயனாளிகளுக்கு 54.30 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் கலெக்டர் பவன்குமார் பேசியதாவது: தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காக ''நிறைந்த சேவை குறைந்த லாபம்”என்ற நோக்கில் அனைத்து கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நகை கடன், மத்திய காலகடன், சுய உதவிக்குழு கடன், மாற்றுதிறனாளி கடன், வீட்டு அடமான கடன், வீட்டு வசதி கடன், கல்வி கடன், நாட்டுப்புற கலைஞர்கள் கடன், கலைஞர் கனவு இல்ல கடன், வாகன கடன், நுகர் பொருள் கடன், மகளிர் தொழில்புரிவோர் கடன், மகளிர் சிறு வணிக கடன், சிறகுகள் கடன் மற்றும் இதர கடன்கள், 2024--25 ஆண்டுக்கு ரூ.3921.35 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இக்கடன் தொகை கோவையிலுள்ளஅனைத்து வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு வருடாந்திர கடன் திட்டத்தில் வழங்கிய6.90 சதவீதம் ஆகும். மேலும் நடப்பு ஆண்டில், அறிவித்தநிலமில்லா ஏழை பெண் விவசாயிகளுக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.
உணவு பதப்படுத்தும் தொழில் மேம்பட மகளிருக்கு ரூ.25 லட்சம் வரை ஏழை பெண்கள் முன்னேற்றம் அடைய இ-ஆட்டோ ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் 2,808 பயனாளிகளுக்கு 54.30 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கோவை எம்.பி.,ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர், ராமகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அழகிரி தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரியத் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

