ADDED : ஜூன் 19, 2026 04:10 AM
அ நிறம் | அளவு
ஆனைமலை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் (பொ) ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.முதல் தர கொப்பரை, 452 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு,103.15 ரூபாய் முதல், 121.67 ரூபாய் வரை விலை கிடைத்தது.
இரண்டாம் தர கொப்பரை, 434 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 53.89 ரூபாய் முதல்,102.10 வரை விலை கிடைத்தது.
மொத்தம், 886 கொப்பரை மூட்டைகளை, 215 விவசாயிகள் கொண்டு வந்தனர். 6 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். இந்த வாரம், 38.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 382 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
