/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரை ஏலத்தில் கிலோ விலை ரூ. 238
/
கொப்பரை ஏலத்தில் கிலோ விலை ரூ. 238
ADDED : செப் 10, 2025 09:50 PM
ஆனைமலை; ஆனைமலையில் நடந்த கொப்பரை ஏலத்தில், கிலோவுக்கு, 238.60 ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.
முதல் தர கொப்பரை, 284 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு,215 ரூபாய் முதல், 238.60 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 409 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 86 ரூபாய் முதல், 185.10 வரை விலை கிடைத்தது. மொத்தம், 693 கொப்பரை மூட்டைகளை, 104 விவசாயிகள் கொண்டு வந்தனர், ஏழு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
இந்த வாரம், 60.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 311.85 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.