/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ. 7 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
/
ரூ. 7 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
ADDED : நவ 29, 2024 12:24 AM
நெகமம்; நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஏழு லட்சம் ரூபாய்க்கு கொப்பரை விற்பனையாகி உள்ளது.
நெகமம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து விலை ஏற்றம் அடையும்போது, ஏல முறையில் விற்பனை செய்கின்றனர்.
தற்போது, விற்பனை கூடத்தில் ஒரு கிலோ கொப்பரை 112 முதல் 135 வரை விலை உள்ளது. நேற்று, 125 மூட்டைகள் (50 கிலோ) கொப்பரை, 7 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. 4 விவசாயிகள் மற்றும் 2 வியாபாரிகள் பயனடைந்தனர்.
மேலும், விற்பனை கூடத்தில், 8,240 மூட்டைகள் கொப்பரையை, 57 விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர். இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.