தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தென்னையில் வேர் வாடல் நோய்த்தாக்குதல்: கட்டுப்படுத்த வழிகாட்டுதல்

தென்னையில் வேர் வாடல் நோய்த்தாக்குதல்: கட்டுப்படுத்த வழிகாட்டுதல்

தென்னையில் வேர் வாடல் நோய்த்தாக்குதல்: கட்டுப்படுத்த வழிகாட்டுதல்


UPDATED : நவ 12, 2026 06:54 PM

ADDED : நவ 12, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 06:54 PM ADDED : நவ 12, 2026 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: தென்னையில், வேர் வாடல் நோயை கட்டுப்படுத்த பசுந்தாள் உரங்களை வட்டப்பாத்தி அல்லது தென்னந்தோப்பு முழுவதும் வளர்த்து, பூக்கும் முன்னரே மடக்கி உழுது விட வேண்டும் என குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

குடிமங்கலம் வட்டாரத்தில் தென்னை 14,250 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில், வேர்வாடல் நோய் குறித்து வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் செல்வகுமார் தலைமையில் குழுவினர் விருகல்பட்டி சுற்றுப்பகுதி கிராமங்களில் நேற்று ஆய்வு செய்தனர்.

இந்நோயை ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை பின்பற்றி கட்டுப்படுத்தலாம் என அக்குழுவினர் விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் செல்வகுமார் அறிக்கை: தென்னை வேர் வாடல் நோயை ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக்கொண்டு கட்டுப்படுத்தலாம். மோசமாக பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அகற்றுவது அவசியமாகும்.

தென்னந்தோப்பில் சரியான வடிகால் வசதி செய்ய வேண்டும். பசுந்தாள் உரங்களான தட்டைப்பயறு, சணப்பை அல்லது தக்கைப்பூண்டு ஆகியவற்றை வட்டப்பாத்தி அல்லது தோப்பு பகுதி முழுவதும் வளர்த்து பூக்கும் முன்னரே மடக்கி உழுது விட வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட அளவான ஒரு மரத்திற்கு தொழு உரம்–50 கிலோ, வேப்பம்புண்ணாக்கு– 5 கிலோ, யூரியா 1.3 கிலோ, சூப்பர்பாஸ்பேட் 2 கிலோ மற்றும் மூரியேட் ஆப் பொட்டாஷ்– 3.5 கிலோ என்ற அளவில் சரி பாதியாக பிரித்து ஆறு மாத இடைவெளியில் இரண்டு முறை இடலாம்.

ஒரு மரத்திற்கு டிரைக்கொடெர்மா அஸ்பெரெல்லம், பேசில்லஸ் சப்டிலிஸ், அசோஸ்பைரில்லம் தலா 100 கிராம், பாஸ்போபாக்டீரியா மற்றும் 50 கிராம் வேர் உட்பூசணம் ஆகியவற்றை 5 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஆண்டுக்கு இரு முறை வட்டப்பாத்தியில் இட்டு மண்ணை கிளறிவிட வேண்டும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை., யின் தென்னை டானிக், 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன் கலந்து ஆண்டிற்கு இரண்டு முறை வேர் வாயிலாக செலுத்தலாம்.

இலை அழுகல் மற்றும் குருத்தழுகல் தென்பட்டால், ஒரு மரத்திற்கு 2 மில்லி ஷெக்சாகோனசோல் 5 ஈ.சி., பூசணக்கொல்லியை 300 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து மரத்தின் குருத்துப் பகுதியில் ஊற்ற வண்டும்.

நோய்க்காரணியை பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகளான கண்ணாடி இறக்கை மற்றும் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை பொடி 200 கிராம் சரிவிகித மணலுடன் கலந்து மரத்தின் குருத்துப் பகுதியில் இடவெண்டும்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.,யின் ‘கோகோகான்’ தாய் நுண்ணுயிர் கலவையை, 5 லிட்டர், கரும்புச்சர்க்கரை 10 கிலோ, தயிர் 5 லிட்டர், சமையல் உப்பு 500 கிராம் மற்றும் தண்ணீர் 150 லிட்டர் உடன் கலந்து 5-7 நாட்கள் வளர்க்கவேண்டும்.

இவ்வாறு இனப்பெருக்கமான ‘கோகோகான்’ நுண்ணுயிரியை மரத்திற்கு, 2 லிட்டர் என்ற அளவில் 8 லிட்டர் தண்ணீர் கலந்து வேர் பகுதி நன்கு நனையுமாறு மூன்று மாத இடைவெளியில் ஊற்றவேண்டும்.

‘கோகோகான்’ தாய்க்கலவை கோவை வேளாண் பல்கலை., யின் பயிர் நோயியல் துறையில் கிடைக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us