/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரையிறுதியில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
/
அரையிறுதியில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
ADDED : டிச 05, 2025 07:17 AM

கோவை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், இந்துஸ்தான் கல்விக் குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து நடத்திய 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி- வினா போட்டியில் பங்கேற்ற, கோவில்மேடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, இடையர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
பொது அறிவு; கற்றல் சார்ந்த சிந்தனை; பாடப்பகுதிகளில் உள்ளார்ந்த புரிதல்; படிப்பின் மீதான ஆர்வத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்க இத்தகைய வினாடி - வினா போட்டியை 'தினமலர்' நாளிதழ் நடத்தி வருகிறது.
கோவில்மேடு உயர்நிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'எச்' அணியை சேர்ந்த ரித்தீஷ், லோகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவர்களுடன், 'இ' அணியின் சுகந்தன், வித்யா லோகேஷ்வரி; 'டி' அணியின் மனோ பிரியா, கந்தசாமி; 'எப்' அணியின் திஜோ ஸ்ரீ, தேஜ வர்ஷினி; 'பி' அணியின் விஜயஸ்ரீ, முத்து ஜெயா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியை கீதா சான்றிதழ்களை வழங்கினார்.
இடையர்பாளையம் நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 66 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'இ' அணியை சேர்ந்த தீபன், லிவினிஷ் ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவர்களுடன், 'எச்' அணியின் சாம் ஜோஷ்வா, ரூபக்குமார் ; 'ஜி' அணியின் சூரியவேல், கருப்புசாமி; 'ஏ' அணியின் முத்துச்செல்வம், பத்மேஷ்; 'எப்' அணியின் எபினேசர், தருண் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியை ஆனந்தலட்சுமி சான்றிதழ்களை வழங்கினார்.
பாப்பநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 40 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'பி' அணியை சேர்ந்த முகிந்தரா காவியா, மதுமிதா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவர்களுடன், 'எப்' அணியின் சஞ்சனா சிவா, ஹர்ஷினி; 'டி' அணியின் பாலகிருஷ்ணன்,சுனில் குமார்; 'எச்' அணியின் தேவ தர்ஷினி, சதீஷ்வரன்; 'இ' அணியின் அனுஷியா, லிடியா நான்லி ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியை உமா சான்றிதழ்களை வழங்கினார்.
அனுப்பர்பாளையம் உயர்நிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'பி' அணியை சேர்ந்த முகமது பாசில், முகமது ரைஹான் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவர்களுடன், 'எச்' அணியின் ஸ்ரீராம், முகமது தவ்பிக்; 'இ' அணி யின் ஷாஹியோ, ஆசில்; 'எப்' அணியின் முகமது இஹ்சான், ஷாஹின்; 'டி' அணியின் ஆதவன், முகமது சுஹைல் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர் வேலுமணி சான்றிதழ்களை வழங்கினார்.

