/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 21ல் துவக்கம்
/
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 21ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 21ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 21ல் துவக்கம்
ADDED : ஏப் 17, 2025 10:04 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சியில், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி வரும், 21ம் தேதி துவங்குகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம், 28ம் தேதி துவங்கி கடந்த, 15ம் தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கென மாநிலம் முழுவதிலும் கல்வி மாவட்டம் வாரியாக பல்வேறு மையங்கள் தேர்வு செய்யப்பட்டன.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் மையமான பி.கே.டி., பள்ளியில் வரும், 21ம் தேதி திருத்தும் பணிகள் துவங்கப்பட உள்ளன.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கல்வி மாவட்டத்தில், 48 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. விடைத்தாள் திருத்த முகாம் அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முன்னிலையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதில், 55 முதன்மை தேர்வர்கள், 55 கூர்ந்தாய்வாளர்கள், 450க்கும் மேற்பட்ட உதவித்தேர்வாளர்கள் மற்றும், மதிப்பீட்டு அலுவலர்கள், அலுவலர்கள், 50 பேர் இப்பணியில் ஈடுபட உள்ளனர். முதல் நாளான, 21ம் தேதி முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் மட்டும் பங்கேற்றனர். தொடர்ந்து, 10 நாட்கள் உதவித்தேர்வாளர்களும் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.
இப்பணிகள் காலை, 8:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை நடைபெறும். விடைத்தாள் திருத்தும் போது தடையில்லா மின்சாரம், தண்ணீர் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரும் வெளியூரை சேர்ந்தவர்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.