/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொசிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
/
கொசிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : செப் 29, 2025 12:39 AM
போத்தனூர்; கோவை, குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் கொசிமா சங்கம் செயல்படுகிறது. இதன், 52வது பொதுக்குழு கூட்டம், சங்க அரங்கில் நடந்தது. இதில் தலைவராக மதிவாணன், செயலாளராக குமார், பொருளாளராக சவுந்தரராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துணை தலைவர்களாக லோகநாதன், ராஜசேகரன், மல்லிகாதேவி, இணை செயலாளர்களாக சிஜு, நவநீதகிருஷ்ணன், மகேஸ்வரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். உடனடி முன்னாள் தலைவர் நடராஜன் மற்றும் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் முன்னிலையில் புதிய நிர்வாகிகள்பதவியேற்றனர்.
அரசு அதிகாரிகள், கொடிசியா, அகில இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், எஸ்.யூ.பி., போசியா சங்க நிர்வாகிகள், சியா சங்கத்தின் ரங்கராஜ், சண்முகம், கோஸ்மா சங்க தலைவர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.