/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறு, குறு தொழில்முனைவோருக்கு நிலைக்கட்டணத்தை குறைக்கணும் கோஸ்மோ கோரிக்கை
/
சிறு, குறு தொழில்முனைவோருக்கு நிலைக்கட்டணத்தை குறைக்கணும் கோஸ்மோ கோரிக்கை
சிறு, குறு தொழில்முனைவோருக்கு நிலைக்கட்டணத்தை குறைக்கணும் கோஸ்மோ கோரிக்கை
சிறு, குறு தொழில்முனைவோருக்கு நிலைக்கட்டணத்தை குறைக்கணும் கோஸ்மோ கோரிக்கை
ADDED : டிச 23, 2024 04:08 AM
கோவை : சிறு, குறு தொழிற்கூடங்களுக்கு ரன்னிங் லைசன்ஸ் குறித்து ஆய்வு செய்ய செல்லும் மாநகராட்சிப்பணியாளர்கள், மிரட்டும் தொனியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று, 'கோஸ்மோ' அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கோவை தெற்கு சிறுகுறு தொழில் முனைவோர் சங்கம் (கோஸ்மோ ) சார்பில், சுந்தராபுரத்திலுள்ள சங்க அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. சங்கத்தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கோஸ்மோ அமைப்பும், மாநகராட்சியும், இணைந்து, தொழில்துறையினருக்கு வழங்கும் ரன்னிங் லைசன்ஸ் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குறுந்தொழில் முனைவோருக்கு, மாநகராட்சி நிர்வாகம் ரன்னிங் லைசன்ஸ் வழங்குவதற்கு, ஒவ்வொருவரும் பயன்படுத்தும் மின் இணைப்பு அளவீட்டின் படி எடுக்க வேண்டும். தொழிற்கூடம் அமைந்துள்ள, சதுர அடியை கணக்கில் எடுக்கக்கூடாது. பெருநிறுவனங்களிடம் தொழில் வரி வசூலிக்கலாம். சிறு குறு தொழில்முனைவோரிடம் வசூலிக்க வேண்டாம்.
மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொழில் நகரமான கோவையை சுற்றி அமைவதற்கான வாய்ப்பை, உருவாக்கித்தர வேண்டும்.
சொத்துவரி, மின்கட்டண வரி உயர்வு உள்ளிட்ட, பல நெருக்கடிகளை சந்தித்து வரும் சிறு,குறு தொழில்முனைவோருக்கு விதிக்கப்பட்டுள்ள நிலைக்கட்டணத்தை, தமிழக அரசு குறைக்க வேண்டும். மாநகராட்சிப்பணியாளர்கள், தொழிற்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளும் போது, கடுமையாகவும் மிரட்டும் தொனியிலும் பேசுவதை, தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

