/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பஞ்சு எரிந்து கருகியது
/
தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பஞ்சு எரிந்து கருகியது
தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பஞ்சு எரிந்து கருகியது
தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பஞ்சு எரிந்து கருகியது
ADDED : ஜன 14, 2025 10:07 PM

அன்னுார்:
அன்னுார் அருகே தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் எரிந்து கருகியது.
அன்னுார் அருகே அ. மேட்டுப்பாளையத்தில் தனியார் ஓ.இ.ஸ்பின்னிங் மில் உள்ளது. ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில், சிவக்குமார் என்பவர் மில் நடத்தி வருகிறார். மில்லின் வடக்கு பகுதியில் பஞ்சு மூட்டைகள் வைக்கும் குடோன் உள்ளது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு பஞ்சு குடோனில் தீப்பிடித்தது. பஞ்சு என்பதால் தீ மள மள வென பரவியது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு எரிந்து கருகியது. குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரின் ஒரு பகுதியும் எரிந்தது. தகவல் அறிந்து அன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சந்திரன் தலைமையில், எட்டு தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அருகில் உள்ள தனியார் தண்ணீர் வாகனங்களில் இருந்தும் தண்ணீர் எடுத்து ஊற்றி பொதுமக்களும் தீயை அணைக்க முயற்சித்தனர். இது குறித்து அன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.