UPDATED : அக் 20, 2026 03:40 PM
ADDED : அக் 20, 2026 03:36 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: தமிழ்நாடு கலை இலக்கிய பெரும் மன்றத்தின் பொள்ளாச்சி கிளை பேரவை கூட்டம், பொள்ளாச்சி வங்கி ஊழியர்கள் சங்க கட்டடத்தில் நடந்தது. பொள்ளாச்சி கிளை தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
மாநிலப்பொருளாளர் ரமணி, கிளைப்பொருளாளர் ஜெயப்பிரகாஷ், இணைச்செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
மன்றத்தின் செயல்பாடுகள், டிச., பிப்., மற்றும் ஏப்., ஆகிய மாதங்களில் நடைபெற உள்ள மன்றத்தின் நிகழ்வுகள், மே தின சிறப்பு நிகழ்ச்சி, ஜன., பிப்., யில் நடைபெறும் மாநில மாநாட்டில் பொள்ளாச்சி அமைப்பின் சார்பில், அதிகப்படியான நபர்கள் பங்கேற்பது; இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
