/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால காலேஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
/
கால காலேஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
ADDED : ஏப் 29, 2025 11:29 PM

கோவில்பாளையம், ; கால காலேஸ்வரர் கோவிலில் 3.70 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூல் ஆகியுள்ளது.
கோவை-அன்னூர் தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையத்தில், 1,300 ஆண்டுகள் பழமையான கால காலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது. இது பாடல் பெற்ற தலமாகும். இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இக்கோவிலில் நான்கு மாதங்களுக்குப் பிறகு, நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு, அறங்காவலர் குழு தலைவர் சிரவை நாகராஜ் தலைமையில் காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது.
இதில் மூன்று லட்சத்து 70 ஆயிரத்து 62 ரூபாயும் 17.5 கிராம் தங்கம், 55 கிராம் வெள்ளி உண்டியலில் இருந்தது. இதையடுத்து உண்டியல் காணிக்கை தொகை வங்கியில் செலுத்தப்பட்டது.
கோவில் செயல் அலுவலர் தேவி பிரியா, ஆய்வாளர் உதயகுமார், அறங்காவலர்கள் மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.