/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல் கொலை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு
/
வக்கீல் கொலை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு
ADDED : நவ 12, 2024 05:48 AM
கோவை ; கன்னியாகுமரியில் வக்கீல் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, கோவையில் கோர்ட் புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், பூதபாண்டியில் வக்கீல் கிறிஸ்டோபர் ஜோபி, அவரது கட்சிக்காரர் இசக்கிமுத்து என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு சார்பில் நேற்று கோர்ட்களை புறக்கணிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, கோவையில் அனைத்து நீதிமன்றங்களையும் வக்கீல்கள் புறக்கணித்தனர். இதனால் நீதிமன்ற விசாரணை பாதிக்கப்பட்டது. வக்கீல்கள் சுதந்திரமாக பணி செய்திட உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தினை மத்திய மற்றும் தமிழக அரசு இயற்ற வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது.