/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தசரா பண்டிகையை முன்னிட்டு கோர்ட் விடுமுறை
/
தசரா பண்டிகையை முன்னிட்டு கோர்ட் விடுமுறை
ADDED : செப் 30, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தசரா பண்டிகையை முன்னிட்டு, நீதிமன்றங்களுக்கு அக்.,5 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
கோவையில், மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், முன்சிப் கோர்ட்கள் செயல்படவில்லை. மாஜிஸ்திரேட் கோர்ட்கள், சிறப்பு கோர்ட்கள், குடும்ப நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்றது. அனைத்து நீதிமன்றங்களிலும் ஊழியர்கள் பணிக்கு வந்தனர். விடுமுறைக்கு பிறகு, 6ம் தேதி வழக்கம் போல அனைத்து நீதிமன்றங்கள் செயல்படும்.