/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் அடிபட்டு பசுவின் கால் முறிவு
/
ரயிலில் அடிபட்டு பசுவின் கால் முறிவு
ADDED : பிப் 05, 2026 05:17 AM

கோவை: புரூக் பாண்டு ரோடு பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை, காலை 8:00 மணியளவில் பசு மாடு ஒன்று கடந்த போது, ரயிலில் அடிபட்டு கால் முறிந்து துண்டானது.
ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பசுவின் கால் முறிந்ததுடன் வயிற்றுப்பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
விலங்குகள் வதை தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''இது வீட்டில் வளர்க்க கூடிய பசு. பார்வை குறைபாடு உள்ளது. உரிமையாளர் யார் என்று தெரியவில்லை. கால் எழும்பு முறிந்து துண்டாகி உள்ளது. மலுமிச்சம்பட்டியில் உள்ள கோசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கால்நடைகளை வீட்டில் வளர்ப்பவர்கள் முறையாக வைத்து பராமரிக்காமல் விட்டதால், இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன,'' என்றார்.

