/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் சிதறும் கான்கிரீட்டால் விபத்து மேடுகள்! கான்கிரீட் கலவை லாரிகளை கவனிப்பாரா கமிஷனர்?
/
ரோட்டில் சிதறும் கான்கிரீட்டால் விபத்து மேடுகள்! கான்கிரீட் கலவை லாரிகளை கவனிப்பாரா கமிஷனர்?
ரோட்டில் சிதறும் கான்கிரீட்டால் விபத்து மேடுகள்! கான்கிரீட் கலவை லாரிகளை கவனிப்பாரா கமிஷனர்?
ரோட்டில் சிதறும் கான்கிரீட்டால் விபத்து மேடுகள்! கான்கிரீட் கலவை லாரிகளை கவனிப்பாரா கமிஷனர்?
ADDED : ஜன 09, 2024 01:07 AM

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காரமடை, தோலம்பாளையம் ரோடு, ரயில்வே கேட் அருகில், மங்கலக்கரை புதுார் சாலையில், கான்கிரீட் லாரிகள் அதிகம் செல்கின்றன. வண்டிகளில் இருந்து, கான்கிரீட் கலவை சாலையில் கொட்டுகிறது. நாளடைவில் மேடுகளாக மாறும் கான்கிரீட்டால், வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
- மோகன்ராஜ், காரமடை.
ஆக்கிரமிப்பால் நெருக்கடி
சுந்தராபுரம், பொள்ளாச்சி ரோடு மற்றும் மதுக்கரை மார்க்கெட் ரோடு விரிவாக்கம் செய்தும் பயனில்லை. சாலையின் இருபுறமும் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்கின்றனர். பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
- சிவராமன், சுந்தராபுரம்.
உதைக்கும் குதிரைகள்
துடியலுார், சேரன் காலனி, விஸ்வநாதபுரம் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிகின்றன. சாலையில் நடந்து செல்பவர்களை குதிரைகள் உதைப்பது, மிதிப்பது மற்றும் கடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
- தங்கவேல், துடியலுார்.
கடும் துர்நாற்றம்
சவுரிபாளையம், 50வது வார்டு, கிருஷ்ணா காலனி, எம்.ஜி.ஆர்., நகரில், குடியிருப்பு நடுவே வாய்க்காலில் பெருமளவு கழிவுநீர் ஓடுகிறது. புதர்மண்டி, குப்பை அடைத்து ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கொசுத்தொல்லை அதிகரிக்கிறது. கடும் துர்நாற்றமும் வீசுகிறது.
- வேலவன், சவுரிபாளையம்.
இருளால் பாதுகாப்பில்லை
பள்ளபாளையம் பேரூராட்சி, ஏழாவது வார்டு, கலா கார்டன் அருகில் தெருவிளக்கு எரிவதில்லை. இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் பெண்கள், முதியவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- வேலுசாமி, கலா கார்டன்.
வெளிச்சம் தராத விளக்கு
ஜி.என்.மில்ஸ், சுப்பிரமணியம்பாளையம், முத்தம்மாள் லே அவுட் வீதி, 'எஸ்.பி -38, பி -17' என்ற எண் கொண்ட கம்பத்தில், விளக்கு மிகவும் மங்கலாக எரிகிறது.
- சரஸ்வதி, முத்தம்மாள் லே-அவுட்.
குண்டும், குழியுமான ரோடு
குனியமுத்துார், ஞானபுரம், நிர்மலா மாதா உயர்நிலைப்பள்ளி செல்லும் வழியில், சாலை நடுவே குழாய் பதிப்பு பணிக்காக சாலை தோண்டப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் பணிகளை முடிக்கவில்லை. குண்டும், குழியுமான சாலையில் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். விரைந்து பணிகளை முடிக்கவேண்டும்.
- அப்துல், குனியமுத்துார்.
துார்வாராத சாக்கடை
ஒண்டிப்புதுார், கொக்காளி தோட்டம், ஐந்தாவது வீதியில், கடந்த ஆறு மாதங்களாக, சாக்கடை கால்வாய் துார்வாரவில்லை. இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- ராஜ சேகரன், ஒண்டிப்புதுார்.
மண் பாதி; தார் பாதி
பாப்பநாயக்கன்புதுார், ஐஸ்வர்யா நகரில், சிறுவாணி டேங்க் அருகில், மூன்று மாதங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதற்கிடையே, சூயஸ் பணியால், தார் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்து இரு மாதங்கள் ஆகியும், மீதி சாலையில் தார்சாலை அமைக்கவில்லை.
- வெங்கடாசலம், ஐஸ்வர்யா நகர்.
தொட்டி வைத்தால்தீரும் தொல்லை
சேரன்மாநகர், சர்ச் வீதி, சோனா ஸ்டோர்ஸ் அருகே சாலையில் பெருமளவு குப்பை தேங்கி கிடக்கிறது. திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க, தொட்டிகள் வைக்க வேண்டும். சீரான இடைவெளியில் குப்பையை அகற்ற வேண்டும்.
- ஜெயராமன், சேரன்மாநகர்.
எரியா விளக்கு
சேரன்மாநகர், ஒன்பதாவது வார்டு, அப்பாச்சி கார்டன் அருகே, 'எஸ்.பி -28, பி -15' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை.
- நிர்மலா,
சேரன்மாநகர்.
நிரம்பி வழியும் சாக்கடை
தெலுங்குபாளையம் பிரிவு, கலைஞர் நகரில், பல வாரங்களாக சாக்கடை கால்வாய் துார்வாரவில்லை. கழிவுநீர் நிரம்பி வழிகிறது. சாலையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. விரைந்து, கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
- திருநாவுகரசு, கலைஞர் நகர்.
சாலையோரம்கழிவுகள் தேக்கம்
செட்டிபாளையம், 53வது வார்டு, கல்லுக்குழி ரோடு, சாலையோரம் குவிந்துள்ள கழிவுகளை அகற்ற வேண்டும். காற்றில் பறக்கும் கழிவுகளால் வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
- பழனி, செட்டிபாளையம்.
பொதுசாலையில் செல்ல தடை
ஒண்டிப்புதுார், கதிர்மில் பள்ளி அருகே, ரேசன் கடை எதிரில், காந்தி நகர் இரண்டாவது வீதியில், பொதுசாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சொந்த பணிகளுக்காக சாலையை மறைத்ததுடன், பொதுமக்கள் செல்லவும் அனுமதிப்பதில்லை.
- காந்திநகர் பொதுமக்கள்.